Baba Ramdev : பதஞ்சலி மருந்துகள் குறித்து பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாபா ராமதேவின் பதஞ்சலி நிறுவனமானது கொரோனா காலத்தில், தங்கள் தரப்பு மருந்துகளை அலோபதி மருந்துகளுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்து இருந்தது. அதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லை என கூறி நீதிமன்றம் விளம்பரங்களுக்கு தடை செய்து இருந்தது.
நீதிமன்ற தடையையும் மீறி பதஞ்சலி நிறுவனம் தாங்கள் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளுக்கு விளம்பரங்களை பதிவு செய்து வந்தனர். தடையை மீறி பதஞ்சலி நிறுவனம் விளம்பரங்களை பதிவு செய்ததால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை, உச்சநீதிமன்ற நீதிபதி ஹிமா கோஹ்லி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
முன்னர் நடைபெற்ற விசாரணையில், பதஞ்சலி நிறுவன வழக்கு தொடர்பாக பாபா ராம்தேவ், பதஞ்சலி நிறுவனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.அதன்படி, இன்று நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். அப்போது பாபா ராம்தேவ் நீதிபதி முன்னர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
அதனை ஏற்காத நீதிபதிகள், இந்த மன்னிப்பை நீங்கள் ஏன் எழுத்துபூர்வமாக கேட்கவில்லை.? நீங்கள் செய்த விளம்பரங்களுக்கு அறிவியல்ப்பூர்வ முகாந்திரம் இருக்கிறதா.? விளம்பரம் செய்ய நீதிமன்றம் தடை விதித்தும், நீங்கள் அதனை திரும்ப செய்ததற்காக நாங்கள் ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது.? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கு மீதான விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…