Categories: இந்தியா

நீட் முறைகேடு.! தவறு செய்தவர்கள் கண்டறியாவிட்டால்..? உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!

Published by
மணிகண்டன்

டெல்லி: நீட் முறைகேடுகள் குறித்து சிபிஐ, மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை ஆகியவை பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றாக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற விசாரணையில், நீதிபதி சந்திரசூட் அமர்வு பல்வேறு கருத்துக்களை கூறினர். அதில், கடந்த முறை நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது விசாரணையில் தெளிவாகிறது. இதில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவ்வாறு அவர்கள் கண்டறிப்படாவிட்டால் நீட் மறுதேர்வு பற்றி ஆலோசிக்க வேண்டி வரும். கண்டுபிடித்துவிட்டால் அவர்களுக்கு மட்டும் நீட் மறுதேர்வு நடத்தப்படும்.

இந்த நீட் தேர்வு முறைகேட்டில் முக்கிய 3 அம்சங்களை, அதாவது எவ்வாறு முறைகேடு நடைபெற்றது என்பது பற்றி தேசிய தேர்வு முகமை ஓர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதே போல, நீட் முறைகேடு தொடர்பாக இதுவரை என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பது பற்றி விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். நீட் முறைகேடுகளை தடுக்க அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது பற்றி மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கை தொடர்ந்த மாணவர்கள் குழுவினரும் தங்கள் தரப்பு கோரிக்கைகள் குறித்து 10 பக்கங்களுக்கு மிகாமல் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை வரும் ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சின்ன சின்ன டார்கெட்.! CSK சாதனையை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்!

சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…

47 minutes ago

இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!

டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…

1 hour ago

இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!

சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…

9 hours ago

பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா.., மளமளவென சரிந்த பஞ்சாப்.., 15 ஓவரில் ஆல் – அவுட்..!

சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…

11 hours ago

வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!

சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…

11 hours ago

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…

12 hours ago