Categories: இந்தியா

தேர்தல் ஒப்புகை சீட்டு வழக்கு.! உச்சநீதிமன்றத்தின் 5 கிடுக்கிப்பிடி கேள்விகள்…

Published by
மணிகண்டன்

VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது.

இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள் மூலம் இயந்திரமயமானது முதலே அதில் பதிவாகும் வாக்குக்களின் உண்மைத்தன்மை குறித்த பல்வேறு சந்தேகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை ஹேக் செய்து ஒரு சின்னத்திற்கு அதிக வாக்குகள் பதிய வைக்கிறார்கள், கூடுதல் வாக்குகள் பதிவாகிறது என பல்வேறு குற்றசாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

இந்த சந்தேகங்கள் தற்போது பூதாகரமாக மாறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகளாக உருவெடுத்துள்ளன. EVM எந்திரத்தில் மக்கள் பதிவு செய்யும் வாக்குகளோடு, VVPATஇல் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்துள்ளவர்களின் பொதுவான கோரிக்கையாக உள்ளது.

தற்போது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு வெறும் 5 VVPAT தேர்தல் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் மட்டுமே ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றன. இதனை தவிர்த்து 100 சதவீத ஒப்பீடு செய்வதே முறையான வாக்கு எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் என்பது மனுதாரர்களின் நோக்கமாக உள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணைகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் முடிந்து இன்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவித்து இருந்த நிலையில், தேர்தல் ஆணையத்திடம் முக்கியமாக 5 கேள்விகளை நீதிபதிகள் அமர்வு முன்வைத்துள்ளது. அவையாவன…

1.தேர்தல் இயந்திரத்தை கட்டுப்படுத்ததும் மைக்ரோ கண்ட்ரோலர் எனப்படும் முக்கிய பகுதி VVPAT (ஒப்புகை சீட்டு) இயந்திரத்தில் பொறுத்தப்பட்டுள்ளதா.? வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளதா.?

2.அந்த மைக்ரோ கண்ட்ரோலர் எனப்படும் மின்னணு பகுதியில் ஒரு முறை மட்டுமே செயல்பாடுகளை (Program) உள்ளீடு செய்ய முடியுமா.? அல்லது மீண்டும் மாற்றி செயல்பாடுகளை (Program) உள்ளீடு செய்யலாமா.?

3. ஒவ்வொரு கட்சி சின்னத்தையும் எவ்வாறு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தல் ஆணையம் பொருந்துகிறது. அந்த சின்னத்திற்கு பதிவான வாக்குகளை எப்படி பதிவு செய்து சேமிக்கப்படுகிறது.?

4.தேர்தல் முடிந்த பிறகு, பதிவான வாக்குகள், இந்திய தேர்தல் சட்டத்தின்படி, 45 நாட்கள் வரை சேமித்து வைக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் 30 நாட்கள் வரை மட்டுமே மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை சேமித்து வைப்பதாக கூறியுள்ளது. அது பற்றி விளக்கம் தர வேண்டும்.

5.வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்கு பதிவு இயந்திரம் , VVPAT சாதனங்கள் சேர்த்து சீல் செய்யப்படுகிறதா.? அல்லது தனித்தனியே சீல் செய்யப்படுகிறதா.?

என 5 முக்கிய கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு முன்வைத்துள்ளது. இதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர். அந்த விளக்கத்தை பொறுத்தே தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான முக்கிய வழக்கில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளிக்க உள்ளனர்.

 

Recent Posts

ஒரே நாடு ஒரே தேர்தல்: ‘வசதி இருந்தா முடிஞ்சா பண்ணிக்கோங்க’ – விஜய் ஆண்டனி!

சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…

16 minutes ago

கஞ்சா வழக்கு : சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்ற காவல்!

மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…

31 minutes ago

எழுத்தாளர் வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது.!

சென்னை: இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்குத் தற்போது…

53 minutes ago

800 பேரின் உயிரை காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசு விருது!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை சார்பில் சிறந்த ரயில்வே ஊழியரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக ரயில் சேவா…

1 hour ago

மோர் களி ரெசிபி செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :பாரம்பரியமிக்க மோர் களி  செய்வது எப்படி என பார்க்கலாம் .. தேவையான பொருள்கள்: தயிர்= இரண்டு ஸ்பூன் மோர்=…

1 hour ago

உடலில் ரத்த அளவை அதிகரிக்கும் சிறந்த 10 உணவுகள்..!

உடலில் ரத்த சிவப்பு செல்களின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை இந்த செய்தி…

2 hours ago