#BREAKING : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்

Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது  செய்தனர்.இதனை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால்  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீது இன்று  தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.அதில் சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.விசாரணை நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்தி ப.சிதம்பரம் ஜாமீன் பெறலாம் என்றும் சிதம்பரம் வெளிநாடு செல்லவும் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் சிறையில் உள்ளதால் தற்போது வெளியில் வரமுடியாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்