சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன்.! உச்சநீதிமன்றம் புதிய டிவிஸ்ட்.!
டெல்லி: பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது சென்னை, திருச்சி, கோவை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி வருவதாக கூறி சென்னை காவல் ஆணையர் உத்தரவின்படி சவுக்கு சங்கர் மீது கடந்த மே 12இல் குண்டர் சட்டம் பதியப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்திற்கு எதிராக சவுக்கு சங்கர் தயார் கமலா முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையில், இரு நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்பளித்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் குண்டர் சட்டத்திற்கு எதிராக வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற போது,சவுக்கு சங்கரை இத்தனை நாட்கள் தடுப்பு காவலில் வைக்கவேண்டிய காரணம் என்ன என்று பல்வேறு கேள்விகளை தமிழக அரசிடம் கேட்டனர். அதற்கு தமிழக அரசும் சவுக்கு சங்கர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தது.
அதன் பிறகு நீதித்துறை குறித்து எதுவும் தவறாக பேச மாட்டேன். ஆதாரமின்றி எதனையும் தவறாக பேச மாட்டேன் என உறுதியளிக்க சவுக்கு சங்கர் தரப்பு தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தனர்.
இதனை அடுத்து , ஆதாரமின்றி எதனையும் பேச கூடாது என கூறி, குண்டர் தடுப்பு சட்டத்திற்கு எதிரான வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்குவதாகவும் இது குண்டர் தடுப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்கிற்கு மட்டுமே என்றும், மற்ற வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு இருந்தால் அதற்கு இந்த இடைக்கால ஜாமீன் பொருந்தாது என்றும்
இந்த இடைக்கால ஜாமீன் ஆனது, சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரையில் மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீதான ஆட்கொணர்வு மனு, தடுப்பு காவலுக்கு எதிரான மனு ஆகிய வழக்கு விசாரணை இனி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரலாம் என அனுமதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.