மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்.! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் முதல்வருமான மணீஷ் சிசோடியா மீது மதுபான கொள்கை முறைகேடு புகார் பதியப்பட்டு சிபிஐயும், மதுபான கொள்கை புகாரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து இருந்தது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி அப்போதைய டெல்லி மாநில முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சுமார் 17 மாதங்கள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளார்.
கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று உத்தரவு வழங்கப்பட்டது. அதில் , மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து 17 மாதங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியில் வரவுள்ளார் மணீஷ் சிசோடியா.
இதே டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025