அயோத்தி வழக்கிற்காக கூடுதல் ஒரு மணிநேரம் இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்!
கடந்த 1992-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று கூறி ஏற்கனவே இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதில் பலர் இறந்தனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரங்களை இந்த சம்பவம் உண்டாக்கியது. பிறகு இந்த இடம் யாருக்கு சொந்தம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பும் வெளியானது. ஆனால் அந்த தீர்ப்பில் இரு தரப்பினரும் திருப்தி அடையாததால், தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய் தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் அனைத்து விசாரணைகளும் முடிவடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக வரும் திங்கள் முதல் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி இந்த வழக்கு மீதான விசாரணை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை சுப்ரீம் கோர்ட் 4 மணிக்கு தனது அலுவல்களை முடித்துக் கொள்ளும். ஆனால், தற்போது அயோத்தி வழக்கு விசாரணைக்காக 5 மணி வரை தனது அலுவல் பணிகளை மேற்கொள்ள உள்ளது.