நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்று 5.30 மணிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளின் ஒருவரான பவன்குப்தா தூக்கு தண்டனையை நிறுத்த கோரி புதிய மனு ஒன்று தாக்கல் செய்தார். கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட புதிய மனுவை சீராய்வு செய்ய குறைந்த அளவே வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்த நீதிமன்றம் சிறையில் துன்புறுத்தப்பட்டதாக தெரிவிப்பது, விதிக்கப்பட்ட தண்டனையை சீராய்வு செய்வதற்கான காரணமாக கூற முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து தூக்கு உறுதி என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் குற்றவாளிகளை இறுதியாக சந்திக்க பெற்றோருக்கு 5 முதல் 10 நிமிடம் வரை ஒதுக்க வேண்டும் என அவர்களின் வழக்கறிஞர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசு தரப்பு முடிவு செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார். ஆனால் சட்ட விதிகள் இடம்கொடுக்காது என்றும், இருபக்கமும் துயரத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தனர். பின்னர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நீதிக்கு கிடைத்த வெற்றி என நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார். இதையடுத்து காலை தூக்கிலிடப்பட உள்ள நிர்பயா குற்றவாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் உடல்நலத்துடன் உள்ளதாக திகார் சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…