தேர்தல் பத்திரங்கள்… நாளை தான் கடைசி.! ஸ்டேட் பேங்கிற்கு ‘செக்’ வைத்த உச்சநீதிமன்றம்.!
Electoral Bonds : கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்குவதை தடை செய்து உத்தரவிட்டது. மேலும், ஏப்ரல் 2019 முதல் தற்போது வரையில் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.
Read More – திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2, காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஏன்.? திருமா விளக்கம்…
இந்த உத்தரவு குறித்து, தேர்தல் பத்திரங்களை வெளியிட ஜூன் 30-ஆம் தேதி வரையில் கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரிட் மனுவை தாக்கல் செய்தது. ஸ்டேட் பேங்க் தாக்கல் செய்த ரிட் வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தேர்தல் பத்திர விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அந்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது என்றும், எனவே இதனை சேகரிப்பதில் பிரச்சனைகள் உள்ளது என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் வாதிடப்பட்டது.
Read More – ஒரே ஒரு முறை மணிப்பூருக்கு வாங்க… பிரதமர் மோடிக்கு குத்துச்சண்டை வீரர் கண்ணீர் மல்க கோரிக்கை!
இதனை அடுத்து, கருத்து தெரிவித்த நீதிபதி அமர்வு, தேர்தல் பத்திரங்கள் வெளியிடுவது தொடர்பாக மிக எளிமையான உத்தரவு தான் வங்கிக்கு நீதிமன்றம் கொடுத்துள்ளது. அதனை பின்பற்றுவதற்கு இத்தனை நாள் கால அவகாச கேட்பது எந்த வகையில் ஏற்புடையது.? நாடு முழுவதும் பல்வேறு SBI வங்கி கிளைகள் மூலம் தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டாலும் அனைத்து விவரங்களும் தலைமை அலுவலகமான மும்பையில் உள்ள ஸ்டேட் பேங்க் மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் போது அதனை சேகரிப்பதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது.?
Read More – அமெரிக்கா எச்சரித்த போதும் அடம்பிடிக்கும் இஸ்ரேல்…
இதனை அடுத்து அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் வெளியிட கால அவகாசம் கேட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ரிட் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், நாளை மாலைக்குள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அனைத்து தேர்தல் பத்திர விவரங்களையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த உத்தரவை செயல்படுத்த தவறினால் ஸ்டேட் பேங்க் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு எச்சரித்துள்ளது.