தேர்தல் ஒப்புகை சீட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி.! – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பீட்டு பார்க்க வேண்டும் என்ற அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், மீண்டும் பழைய வாக்கு சீட்டு முறைக்கு செல்ல வேண்டாம். தற்போது தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தின் மீதான பாதுகாப்பு கேள்விகளுக்கு அளித்த விளக்கங்கள் அனைத்தும் ஏற்கக்கூடியவையே என கூறி வழக்குக்களை தள்ளுபடி செய்துள்ளனர்.
மேலும், EVM இயந்திரத்தில் வாக்குப்பதிவு முடிந்ததும் அதனை சீல் செய்து, வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் குறைந்தபட்சம் 45 நாட்கள் தேர்தல் ஆணையம் சேமித்து வைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.