இன்று தான் கடைசி… SBIக்கு மீண்டும் கெடு வைத்த உச்சநீதிமன்றம்.!
Electoral Bonds : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் நிதி வாங்குவதை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தடை செய்தது. மேலும், பாரத ஸ்டேட் வங்கி மூலம் அரசியல் கட்சிகள் வாங்கிய நிதி விவரங்களும், அவர்களுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி கொடுத்த நிறுவனங்களின் விவரமும் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Read More – தேர்தல் பத்திரங்கள்! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த புதிய முக்கிய தகவல்
இந்த உத்தரவை அடுத்து, பல்வேறு இழுபறிக்கு பின்னர் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட்டது. எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு தேர்தல் பத்திரங்களை வாங்கியது என்ற விவரங்கள் அடங்கிய ஒரு தனி அட்டவணையும், எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் வாங்கியது என்ற தனி அட்டவணையும் வெளியிட்டு இருந்தது. ஆனால், அதில் எதிலுமே தேர்தல் பத்திர எண்கள் (சீரியல் நம்பர்கள்) குறிப்பிடப்படவில்லை.
தேர்தல் பத்திர எண்களை ஸ்டேட் பேங்க் வெளியிடாதது குறித்து தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதி அமர்வு முன்னர் நேற்று விசாரணைக்கு வந்தது.
Read More – சீரியல் நம்பர்கள் எங்கே.? SBIக்கு கடும் நெருக்கடி..! உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.!
இந்த விசாரணையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பாரத ஸ்டேட் வங்கிக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியது. எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை எந்தெந்த கட்சி வாங்கியது, தேர்தல் பத்திரங்களை பணமாக எப்போது மாற்றிக் கொண்டனர் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் பத்திர எண்களுடன் வெளியிடவே நாங்கள் உத்தரவிட்டோம். ஆனால், அதனை ஸ்டேட் பேங்க் தெரிவிக்கவில்லை. இதனால் இந்த வழக்கு இன்னும் முழுமை பெறாமல் இருக்கிறது என்றும் நீதிபதி அமர்வு குறிப்பிட்டது.
மேலும், தேர்தல் பத்திர எண்களை இன்றைக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்க வேண்டுமென்றும், ஏன் சீரியல் நபர்களை முன்னரே சமர்ப்பிக்கவில்லை என்ற விளக்கத்தையும் பாரத ஸ்டேட் வங்கி வரும் திங்கள்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.