யுபிஎஸ்சி என்னும் சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்று யுபிஎஸ்சி உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வருகிற அக்டோபர் 4 ந்தேதி அகிலந்திய அளவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று மற்றும் வட, வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் 20 பேர் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இவர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோரது அமர்வு முன் விசாரணைக்கு வந்தது தேர்வை ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசும், தேர்வை நடத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்று யுபிஎஸ்சி பதில் அளித்து உள்ளது. மேலும், தேர்வை ஏன்? ஒத்திவைக்க முடியாது? என்பதற்கான காரணங்களை பட்டியலிட்டு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய யுபிஎஸ்சிக்கு உச்சநீதிமன்றன உத்தரவிட்டது.மேலும் வழக்கு செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில்…
மும்பை: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு தான் தற்போது உலக நாடுகளில் தலைப்பு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில்…
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…