உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.மேலும் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நீதித்துறை வட்டாரத்தில் இந்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.ஆனால் இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் பாலியல் புகாரில் தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக கூறப்பட்ட வழக்கில் இன்று மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில்,நீதித்துறையை கட்டுப்படுத்த நினைப்பது யார் என்பதை கண்டறிவது அவசியம் .பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்தி இயக்க முடியாது .நீதித்துறையை கட்டுப்படுத்தி இயக்க நினைப்பவர்களை கண்டறிய சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் .கடந்த 3 , 4 ஆண்டுகளாக நீதித்துறை மீது இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…