காஷ்மீர் – லடாக்.! சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது செல்லும்.! உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!  

Supreme Court Chief Justice Chandrachud

இந்திய சட்டப்பிரிவு 370இன் படி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டது. அம்மாநிலத்தில் சொத்து பரிமாற்றங்கள் அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும் இந்திய சட்டங்கள் அங்குள்ள சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்ற பிறகே அமல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அந்த சட்டத்தின் கீழ் செயல்பாட்டில் இருந்தன.

இதனை கடந்த 2019ஆம்  ஆண்டு  ஆளும் பாஜக அரசு ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது . காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரித்து அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன . அப்போது முதல் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி தான் அமலில் இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக காஷ்மீர் மற்றும் லாடாக் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறாமல் உள்ளது.

‘விளைவுகளை சந்திக்க நேரிடும்’ – கேரள முதல்வர் எச்சரிக்கை..!

சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் மீதான விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் அரசியல் சாசன அமர்வு முன் தொடர்ந்து நடைபெற்று வந்தது. விசாரணை, வாதம், பிரதிவாதம் நிறைவடைந்து இன்று (டிசம்பர் 11) தீர்ப்பு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது .

அதன்படி இன்று நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தனர். அதில் 3 விதமான தீர்ப்புகள் வெளியாகின. முதலில் தலைமை நீதிபதி சந்திரசூட் , நீதிபதி கவாய், நீதிபதி சூர்யகாந்த்  ஆகியோர் கூறுகையில்,  ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது அது யூனியன் பிரதேசமாக கருதப்படும் மாநிலத்தின் செயல்பாட்டுக்காக குடியரசுத் தலைவர் மாநில அதிகாரத்தை பயன்படுத்துவது ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. சிறப்பு சட்டம் என்பது மாநிலத்தை இந்தியவுடன் இணைக்கத்தான் தவிர பிரிப்பதற்காக அல்ல.

சட்ட பிரிவு 370 என்பது ஓர் இடைக்கால தீர்வு மட்டுமே அது போர்சூழலை கட்டுப்படுத்துவதற்காக தற்காலிகமாக உருவாக்கப்பட்ட சட்ட அமைப்பு. இதனை நிரந்தரமாக்க முடியாது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே சட்டப்பிரிவு 370ஐ குடியரசு தலைவர் ரத்து செய்ய முடியும். அதன்படி, லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக பிரித்தது சரிதான். அடுத்த ஆண்டு செப்டம்பர் 30க்குள் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்க்கிற்கு சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு இரு மாநிலத்தையும் சட்டரீதியாக அதிகாரப்பூரவமாக மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்து உள்ளது.  நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல்  இதில் இருந்து வேறுபட்ட தீர்ப்பையும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா இரண்டு தீர்ப்புடனும் தான் ஒத்துப்போவதாகவும் கூறியுள்ளார். 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் சட்ட பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என்றபடி தீர்ப்பு வழங்கியதால் அதுவே இறுதி தீர்ப்பாக கருதப்படும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்