நீட் முறைகேடு.., மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது.! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.!
டெல்லி: நீட் தேர்வு முழுவதுமே முறைகேடு நடைபெறவில்லை என்பதால் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது. உச்சநீதிமன்றம் உத்தரவு.
நடப்பாண்டில் மருத்துவ சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் நுழைவு தேர்வில் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சில தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றதாக புகார் கூறப்பட்டு அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.
இதில் வழக்கு தொடர்ந்து இருந்த மாணவர்கள் தரப்பு, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதியாகி உள்ளதால் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும், நீட் தேர்வில் தேர்ச்சி தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக்கு வராதோர் தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் இதனை ஆரம்பம் முதலே உச்சநீதிமன்றம் நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்து வந்தனர்.
இதனை அடுத்து, மாநில வாரியாக, தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு மையம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து இன்று இறுதிக்கட்ட விசாரணையில், சர்ச்சைக்குரிய கேள்விக்கு ஐஐடி குழு விளக்கம் அளித்து இருந்தது. மேலும், நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை குறித்து தேசிய தேர்வு மைய தரப்பு விளக்கம் அளித்தது.
தேசிய தேர்வு மையம் முன்வைத்த கோரிக்கையில், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சில இடங்களில் நீட்தேர்வு முறைகேடு ஏற்பட்டது. ஆனால் அது ஒட்டுமொத்த நீட் தேர்வையும் பதிக்கவில்லை. வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ சிலரை கைது செய்து அவர்களிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது. இதுவரை 155 தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ தெரிவித்து , விசாரணையை தொடர்ந்து வருகிறது என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
இந்த விளக்கங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நீட் முறைகேடு சில இடங்களில் நடைபெற்றுள்ளதை உச்சநீதிமன்றம் மறுக்கவில்லை. ஆனால் அதற்காக நீட் தேர்வு ஒட்டுமொத்த பாதிக்கப்படவில்லை. எனவே ஒட்டுமொத்தமாக நீட் மறுதேர்வு நடத்த தேவையில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.