மகாராஷ்டிரா ஆளுநரின் முடிவு சரியா ? உச்சநீதிமன்றத்தில் விசாரணை

Default Image

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவேந்திர ஃபட்னாவிஸ்சை ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் தொடர்ந்த வழக்கின் விசாரணை  உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.
மகாராஷ்டிரா அரசியலில் திடீரென்று நேற்று  அம்மாநில முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். .
இந்த நிலையில்  மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக  ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி  காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில்  மனு  தாக்கல் செய்தது.தற்போது அந்த வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்