உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை!
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை.
ஹல்த்வானியின் பன்பூல்புரா பகுதியில் உள்ள ரயில்வே நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அதிகாரிகளுக்கு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிடத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உத்தரகாண்ட் அரசு மற்றும் இந்திய ரயில்வேக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
பின்னர் இந்த வழக்கை பிப்ரவரி 7-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இவ்வழக்கு விசாரணையின்போது, ஒரே இரவில் 50 ஆயிரம் மக்களை வெளியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். ஹல்த்வானியின் பன்பூல்புரா பகுதியில் 4000 குடும்பங்களை ஒரே வாரத்தில் துணை ராணுவத்தை கொண்டு வெளியேற்ற மாநில அரசு நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.