ஏன் ஜாமீன் கோரவில்லை? – கெஜ்ரிவால் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

arvind kejriwal

Arvind Kejriwal: ஜாமீன் கேட்டு ஏன் மனுதாக்கல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு கேள்வி.

கடந்த மாதம் 21ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதன்பின் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொண்டு இருந்தது. அதன்படி அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார்.

இதனிடையே, அமலாக்கத்துறை கைதை எதிர்த்தும், காவலில் அனுப்பியதை எதிர்த்தும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது நிராகரிக்கப்பட்டது. இதனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறையில் பதில் மனு தாக்கல் செய்த நிலையில், பின்னர் கெஜ்ரிவால் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஜாமீன் கேட்டு ஏன் இன்னும் மனுதாக்கல் செய்யவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு கூறியதாவது, கைது நடவடிக்கையே சட்டவிரோதம், அதில் எப்படி ஜாமீன் கேட்க முடியும். இதனால் தான் கைது நடவடிக்கையே ரத்து செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத்துறை காவலில் அனுப்பியது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்பதற்காக நேரடியாக மனு தாக்கல் செய்துள்ளோம். போதுமான ஆதாரங்கள் ஏதுமின்றி கைது நடவடிக்கை நடந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையிலும், சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்களிலும் அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் குறிப்பிடவில்லை. எந்த ஆவணங்களும் அவருக்கு எதிராக ஆதாரம் இல்லாத பட்சத்தில் கைது நடவடிக்கை நடந்துள்ளது. இதனால் தான் கைது என்பது சட்டவிரோதம் என்று கூறுவதாகவும், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் ஜெஜ்ரிவால் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்