வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் ! நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனை தள்ளிப்போக வாய்ப்பு

Published by
Venu

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரும் மத்திய அரசு மனுவை மார்ச் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டதுஇந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இதன் பின்னர் தூக்கு தண்டனையை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.இறுதியாக குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அறிவித்தது.ஆனால் நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்ற டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மத்திய அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் மார்ச் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், குற்றவாளிகளுக்கு 4 பெருக்கும்  மார்ச் 3-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது சந்தேகம் தான்.

Published by
Venu

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

4 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

5 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

5 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

6 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

6 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

7 hours ago