உச்சநீதிமன்றம் அதிரடி !சுரங்க உரிமங்கள் அனைத்தையும் ரத்து…..
உச்சநீதிமன்றம் உத்தரவில் , கோவாவில் கனிமவள சுரங்கங்களுக்கு இரண்டாவது முறையாக புதுப்பிக்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்த நிலையில், மீண்டும் ஏலம் அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. கோவாவில் இயங்கிவரும் கனிமவள சுரங்கங்களுக்கான குத்தகை உரிமத்தை மாநில அரசு 2வது முறையாக புதுப்பித்துக் கொடுத்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், புதுப்பிக்கப்பட்ட அனைத்து உரிமங்களையும் ரத்து செய்ததுடன், இது முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறிய செயல் என்றும் கண்டனம் தெரிவித்தது.
கனிமவள சுரங்கங்களை மீண்டும் புதிதாக ஏலத்தில் விடுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், சுரங்கங்களை ஏலத்தில் எடுக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிதாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.