மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் ஆதரவு அளிக்கும் என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
நேற்று காலை முதல் 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்நிலையில் 22 மணி நேர வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்தது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல்
பாஜக 109 இடங்களிலும்,பகுஜன் சமாஜ் கட்சி இரு தொகுதிகளை வென்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி ஒரு தொகுதியில் வென்றுள்ளது. 4 தொகுதிகளை சுயேச்சைகள் கைப்பற்றி உள்ளனர்.
அறுதிப் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு குறைந்தபட்சம் 116 எம்எல்ஏக்கள் பலம் தேவை. எனவே மத்திய பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலை எழுந்தது.
ம.பி.யில் பேரவை தேர்தல் முடிவில் பின்னடைவை சந்தித்தாலும் வாக்குகளில் முன்னிலை பெற்றது பாஜக .ஒட்டு மொத்தமாக பாஜக 41% (1,56,42,980) வாக்கு, காங்கிரஸ் 40.9% (1,55,95,153) வாக்கு பெற்றது.ம.பி.யில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 47,827 ஆகும்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் பாஜக மீதான அதிருப்தியின் காரணமாகவே மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். பாஜக பட்டியல் இன மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் ஆதரவு அளிக்கும் என்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.மேலும் தேவைப்பட்டால் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…