பாரத் பந்துக்கு ஆதரவு மட்டுமே அடைப்பு இல்லை – வங்கி ஊழியர்கள்!

Published by
Rebekal

இன்று நாடு முழுவதும் நடைபெறக்கூடிய பாரத் பந்த் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தந்தாலும், வங்கியின் ஊழியர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் கடந்த இரு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரக்கூடிய இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் முழு அடைப்பு செய்து தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு விவசாய சங்கங்கள் அழைப்புக் கொடுத்து இருந்தது.

இந்த அழைப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரி முன்னணி தலைவர் சீதாராம், யெச்சூரி ராஜா ஆகிய பல கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் மூன்று வேளாண் சட்டங்கள் தற்போது வரை ரத்து செய்யப்படாததால் இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெறவுள்ளது.

விவசாயிகள் அழைப்பு கொடுத்திருந்தாலும், வங்கி அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் ஆதரவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முழு அடைப்பு போராட்டத்தில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளனர். அதுபோல அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி எஸ் வெங்கடாசலம் அவர்கள் கூறுகையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள தங்களால் முடியாது. ஆனால் விவசாயிகளின் போராட்டத்தை தாங்கள் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், போராட்டம் நடைபெறுகையில் தங்களது ஆதரவை தெரிவிப்பதற்காக வங்கிக் கிளைகளின் முன் பதாகைகள் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவாக கொடுப்போம் எனவும் இதனால் வங்கியின் பணிகள் முடக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்! 

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

36 minutes ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

1 hour ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

2 hours ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

2 hours ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

2 hours ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

3 hours ago