‘சூப்பர் ஸ்ப்ரேடர்’ – மக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை – டாக்டர் வி.கே.பால்

Published by
லீனா

புதிய கொரோனா வைரஸ் 70% வேகத்துடன் பரவி வருவதாகவும், இது ‘சூப்பர் ஸ்பைடர் ஆக மாறி உள்ளதாக மத்திய அரசின் சார்பில், நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறியுளளார். 

இங்கிலாந்திலே பரவிவரும் புதிய வகை வைரஸ் ஆனது உலக மக்கள் மத்தியில் மீண்டும் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அங்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுடனான விமான சேவைகளை உலக நாடுகள் தடை செய்துள்ளது.

இந்நிலையில் இந்த வைரஸ் ஆனது 70% வேகத்துடன் பரவி வருவதாகவும், இது ‘சூப்பர் ஸ்பைடர் ஆக மாறி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய அரசின் சார்பில், நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் அவர்கள் கூறுகையில், தற்போது நடத்தியுள்ள விவாதங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில்  யாரும் பீதியடைய தேவையில்லை என்றும், இந்த புதிய வைரஸ் காரணமாக நாம் விரிவான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் சிகிச்சை வழிகாட்டுதல்களில் எவ்விதமான மாற்றமும் இல்லை. தற்போது உருவாக்கப்பட்டு வருகிற தடுப்பூசிகளின் செயல்திறனில் இந்த புதிய வகை கொரோனா பாதிப்பை ஏற்படுத்தாது. அதே நேரத்தில் மரணத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரிக்காது. நோயின் தீவிரம் போன்றவற்றை அதிகரிக்காது என்று தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், இன்னும் அந்த வைரஸ் கண்டறியப்படவில்லை. வைரசுக்கு எதிரான போராட்டம் இந்தியாவில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

5 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

5 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

6 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

6 hours ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

7 hours ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

7 hours ago