‘சூப்பர் ஸ்ப்ரேடர்’ – மக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை – டாக்டர் வி.கே.பால்
புதிய கொரோனா வைரஸ் 70% வேகத்துடன் பரவி வருவதாகவும், இது ‘சூப்பர் ஸ்பைடர் ஆக மாறி உள்ளதாக மத்திய அரசின் சார்பில், நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறியுளளார்.
இங்கிலாந்திலே பரவிவரும் புதிய வகை வைரஸ் ஆனது உலக மக்கள் மத்தியில் மீண்டும் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அங்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுடனான விமான சேவைகளை உலக நாடுகள் தடை செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வைரஸ் ஆனது 70% வேகத்துடன் பரவி வருவதாகவும், இது ‘சூப்பர் ஸ்பைடர் ஆக மாறி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய அரசின் சார்பில், நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் அவர்கள் கூறுகையில், தற்போது நடத்தியுள்ள விவாதங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் யாரும் பீதியடைய தேவையில்லை என்றும், இந்த புதிய வைரஸ் காரணமாக நாம் விரிவான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் சிகிச்சை வழிகாட்டுதல்களில் எவ்விதமான மாற்றமும் இல்லை. தற்போது உருவாக்கப்பட்டு வருகிற தடுப்பூசிகளின் செயல்திறனில் இந்த புதிய வகை கொரோனா பாதிப்பை ஏற்படுத்தாது. அதே நேரத்தில் மரணத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரிக்காது. நோயின் தீவிரம் போன்றவற்றை அதிகரிக்காது என்று தெரிவித்துள்ளார்.
எனவே நாட்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், இன்னும் அந்த வைரஸ் கண்டறியப்படவில்லை. வைரசுக்கு எதிரான போராட்டம் இந்தியாவில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.