சியா என்ற நாய் டேனி என்ற மற்றொரு நாய்க்கு ரத்ததானம் செய்து உயிரை காப்பாற்றியுள்ளது.
நடிகர் அனிந்தியா சாட்டர்ஜியின் 13 வயதான லாப்ரடோர் சியா என்ற நாய் 13 வயதான ஸ்பிட்ஸ் டேனி என்ற மற்றொரு நாய்க்கு ரத்ததானம் செய்து உயிரை காப்பாற்றியுள்ளது. டேனி சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டதை தொடர்ந்து அவர் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு சிகிச்சைக்காக வந்தனர். அந்த சிகிச்சையில் டேனிக்கு ரத்தம் தேவைப்பட்டது. அப்போது நடிகர் அனிந்தியாவின் 13 வயது லாப்ரடோர் சியா ரத்தம் தானம் செய்து உதவியுள்ளது.
இது குறித்து கொல்கத்தாவில் உள்ள கால்நடை மருத்துரான டெபாஜித் ராய் கூறுகையில், டேனிக்கு நன்கொடையாளர் கிடைத்ததில் மகிழ்ச்சி என்றும், நாய்கள் இரத்ததானம் செய்வது நடைமுறையில் இல்லை, ஏனெனில் இதனை குறித்த மிக குறைந்த விழிப்புணர்வே மக்களிடத்தில் உள்ளது என்று கூறினார். இது குறித்து நடிகர் அனிந்தியா கூறியதாவது, டேனிக்கு சியா இரத்ததானம் செய்ததை தொடர்ந்து அவர் நலமாக இருப்பதாகவும், அவரை குறித்து பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். ஒரு உயிரை காப்பாற்றி சியா சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…