அவரின் வாழ்க்கை நாட்டிற்காக! கெஜ்ரிவால் கைது தொடர்பில் மெளனம் கலைத்த மனைவி
Sunitha Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகியுள்ள நிலையில் அது தொடர்பில் முதல் முறையாக அவர் மனைவி சுனிதா கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
Read More – ஒன்று கூடிய ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்! கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்
இன்று மதியம் டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது, அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், “நான் உள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, என்னுடைய வாழ்க்கை நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. சிறையில் இருந்தாலும் தேசத்திற்கு சேவை செய்வேன்” என்றார்.
Read More – கர்ப்பிணி பெண்களே…ரூ.5,000 உதவித் தொகை பெறுவது எப்படி.? இதோ முழு விவரம்…
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பில் அவர் மனைவி சுனிதா கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் தள பதிவில், “இது டெல்லி மக்களுக்கு செய்யும் துரோகம். உங்கள் முதலமைச்சர் எப்போதும் உங்களுடன் நிற்கிறார். உள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, அவருடைய வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு எல்லாம் தெரியும்.” என பதிவிட்டுள்ளார்.
Delhi CM & AAP national convenor Arvind Kejriwal’s wife Sunita Kejriwal tweets, “…This is a betrayal to the people of Delhi. Your Chief Minister has always stood with you. Whether inside or outside, his life is dedicated to the country. The public knows everything…” pic.twitter.com/FJID2A2GwL
— ANI (@ANI) March 22, 2024