#Breaking:மிக முக்கிய பிரபலம் கொரோனாவால் உயிரிழப்பு-பிரதமர் மோடி இரங்கல்..!
சிப்கோ இயக்கத்தை அறிமுகப்படுத்திய பிரபல சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுந்தர்லால் பகுகுணா கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.அவரின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது மிகவும் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக,அரசியல் தலைவர்கள்,திரைத்துறையினர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
அந்த வகையில்,சிப்கோ இயக்கத்தை அறிமுகப்படுத்திய பிரபல சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுந்தர்லால் பகுகுணா(வயது 94),கொரோனா தொற்று காரணமாக ரிஷிகேஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதனையடுத்து,சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுந்தர்லால் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”ஸ்ரீ சுந்தர்லால் பாஹுகுனா ஜியை கடந்து செல்வது நம் தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு. இயற்கையோடு இணக்கமாக வாழும் பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளை அவர் வெளிப்படுத்தினார். அவரது எளிமையும் இரக்க உணர்வும் ஒருபோதும் மறக்கப்படாது.அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.ஓம் சாந்தி.”,என்று கூறி பதிவிட்டிருந்தார்.
Passing away of Shri Sunderlal Bahuguna Ji is a monumental loss for our nation. He manifested our centuries old ethos of living in harmony with nature. His simplicity and spirit of compassion will never be forgotten. My thoughts are with his family and many admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) May 21, 2021
இதனைதொடர்ந்து,நாட்டின் முக்கிய தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுந்தர்லால் பகுகுணா 1970 ஆம் ஆண்டுகளில் சிப்கோ இயக்கத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.மேலும்,உத்தரகாண்டில் வன பாதுகாப்பு பிரச்சாரம் நடத்தி உலகளாவிய கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.