ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார்! நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!
வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தில் ரூ.7,640 கோடி வருமான வரி செலுத்த உள்ளதாக மோசடி வழக்கில் கைதியுள்ள சுகேஷ் சந்திரசேகர் நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக கூறி அரசியல் பிரமுகரிடம் ரூ.50 கோடி வரை ஏமாற்ற முயற்சித்த வழக்கு இதுபோல பல்வேறு மோசடி வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுளளார் சுகேஷ் சந்திரா.
இவர், அண்மையில் தனது வழக்கறிஞர் மூலமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு கடிதம் எழுதியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதில், தன்மீதான வருமான வரித்துறை தொடர்பான வழக்குகளை முடித்துவிட விரும்புவதாகவும், அதற்கான வரியை கடந்தஆண்டு தனக்கு கிடைத்த வருமானம் கொண்டு வரி செலுத்தவும் சுகேஷ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதாக வெளியான தகவலின்படி, 2024-2025 நிதியாண்டில் சுகேஷ், வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு ஷைத்ததன் மூலம் ரூ.22,410 கோடி வருமானம் கிடைத்ததாகவும் அதனால் ரூ.7,640 கோடி ரூபாய் வரி கட்ட தயாராக இருப்பதாகுவும் குறிப்பிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மேற்கண்ட வருமானம் சட்டப்பூர்வமாக சம்பாதித்தது எனவும் சர்வதேச சட்டங்களுக்கு இணங்கி செயல்படுவதாகவும் சுகேஷ் கூறியுள்ளாராம்.