ககன்யா மாதிரி விண்கலம் சோதனை – மேலும் தாமதம்…!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று நடைபெறுகிறது.
ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் TV-D1 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. தரையில் இருந்து 16.6 கி.மீ. தூரம் வரை அனுப்பி, மீண்டும் அதை பூமிக்கு கொண்டுவந்து வங்கக்கடலில் இறக்கப்படும்.
இந்த சோதனை வெறும் 20 நிமிடத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதிரி விண்கலம் 16.6 கி.மீ தூரம் சென்றதும் வினைகளத்தில் வீர்ரகள் அமரும் பகுதி தனியாக பிரிந்துவிடும்.
பின் பாராசூட் மூலம், பாராசூட்கள் மூலம் ஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக இறக்கப்படும். இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் வங்கக்கடலில் விழுந்த விண்கலத்தை மீட்டு இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள் என கூறப்படுகிறது.
ககன்யா மாதிரி விண்கலம் சோதனை காலை 8 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் மோசமான வானிலை காரணமாக 8.30-க்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது மோசமான வானிலை காரணமாக இந்த சோதனைக்கு மேலும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025
எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !
February 26, 2025
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025