ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே, இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக மத்திய அரசு தரப்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…