அனுமதி மறுக்கப்பட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்த சிறுமி!
9ம் வகுப்பு மாணவி ஹைதராபாதில் உள்ள ரச்சகொண்டா பகுதியில் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொண்டார்.
அந்த 14 வயது மாணவி பள்ளியிலிருந்து திரும்பியதும் தன் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மாணவியின் பையில் தன் தற்கொலைக்கான காரணத்தை தெளிவாக எழுதி வைத்த கடிதம் சிக்கியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.