சுதீக்ஷா பாட்டி மரணம் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார்.
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சுதீக்ஷா பாட்டி(20) என்ற பெண் படித்து வந்தார். இவர், 2018ஆம் ஆண்டு 98 சதவீத மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தார். கொரோனா தொற்றால் ஜூன் மாதம் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில்,இந்த மாதம் அமெரிக்கா திரும்ப திட்டமிட்டிருந்த சுதீக்ஷா, படிப்பு சம்பந்தமான சில பொருட்களை வாங்குவதற்காக புலாந்த்ஷாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது மாமாவுடன் நேற்று மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். அப்போது இரண்டு நபர்கள் அருகில் வந்து அந்த பெண்ணை மோசமான வார்த்தைகளால் கேலி செய்துள்ளனர்.
சுதீக்ஷாவின் மாமா மோட்டார்சைக்கிளை மெதுவாக ஓட்டியபோதும் திடீரென்று பின்னால் வந்து இடித்ததால் இருவரும் நிலைதவறி கீழே விழுந்துவிட்டனர். விபத்து நடந்தவுடன் சுதீக்ஷாவுக்கு தலையில் அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் கீழே விழுந்ததை பார்த்த அந்த இருவரும் தப்பியோடியுள்ளனர்.
இந்நிலையில், விசாரணையில் ஈடுபட்ட போலீசார் இதுகுறித்து கூறுகையில், 10,000 க்கும் மேற்பட்ட புல்லட் உரிமையாளர்களின் அழைப்பு பதிவுகள் கண்காணிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். மேலு, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 1,000-க்கு மேற்பட்டோரை விசாரித்த நிலையில், 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…