திடீரென உயர்ந்த கேஸ் சிலிண்டரின் விலை.. அதிர்ந்த மக்கள்!
தொடர்ந்து மூன்று மாதங்களாக கேஸ் சிலிண்டரின் விலை சரிந்து வந்த நிலையில், தற்பொழுது அதன் விலை உயர்ந்துள்ளது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த மூன்று மாதங்களாக கேஸ் சிலிண்டரின் விலை, குறைந்த நிலையில், தற்பொழுது சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் சிலிண்டரின் விலை ரூ.37 வரை உயர்த்தியுள்ளதாக ஐ.ஓ.சி. எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரூ.569.50 ஆக இருந்த சிலிண்டரின் விலை, தற்பொழுது ரூ.606.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, பிரதமரின் இலவச சிலிண்டர் மற்றும் மானிய சிலிண்டருக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது. இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது.