பாஜக வேட்பளர் திடீர் விலகல்.. புதிய வேட்பாளரை நியமித்த கட்சி தலைமை!
Satyadev Pachauri: மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் பாஜக எம்பி சத்யதேவ் பச்செளரி திடீரென விலகினார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக தேசிய கட்சிகள் உட்பட அனைத்து மாநில கட்சிகளிலும் ஆயுதமாகி வருகின்றனர். அதன்படி, கூட்டணி, பங்கீட்டை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில், பாஜக இதுவரை 5 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த சூழலில், மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக எம்பிக்கள் ஒருபக்கம் விலகி வரும் நிலையில் மறுபக்கம் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களும் சிலர் விலகி வருகின்றனர்.
அந்தவகையில், மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் பாஜக எம்பி சத்யதேவ் பச்செளரி அறிவித்தார். வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு பல நாட்கள் கழித்து, போட்டியிட போவதில்லை என திடீரென அறிவித்தது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்படி, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்யதேவ் பச்செளரி, போட்டியிட மறுத்து பாஜக தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். வயது மூப்பு காரணமாக விலகியதாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதிய வேட்பாளரை நியமிக்க பாஜக திட்டமிட்டது. இந்த நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என கான்பூர் பா.ஜ., எம்.பி., சத்யதேவ் பச்சௌரி அறிவித்ததை தொடர்ந்து அந்த தொகுதியில், முன்னாள் மூத்த பத்திரிகையாளர் ரமேஷ் அவஸ்தியை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.