மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்..! துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் ராஜினாமா.!
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் ,காங்கிரஸ் ,மற்றும் சிவசேனா கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த சனிக்கிழமை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பவார் ஆளுநர் கோஷ்யாரி முன் பதவிஏற்று கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பாஜக ஆட்சி அமைத்தது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் ,காங்கிரஸ் ,மற்றும் சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை இன்று நடைபெற்றது. இதில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தேவேந்திர பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் துணை முதலமைச்சராக பதவியேற்ற அஜித் பவார் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.