ஆந்திராவில் திடீர் பதற்றம் ..!ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.சுட்டுக்கொலை..!காவல் நிலையத்திற்கு தீ வைப்பு ..!
ஆந்திரா அரக்கு தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ் சுட்டுக்கொலை செய்யப்பட்டதால் காவல் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதியை சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ் ஆவார்.இவர் தெலுங்கு தேசம் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.இதற்கு முன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார் .இந்நிலையில் இவர் அரக்கு தொகுதியில் உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரி சோமாவுடன் சென்றுள்ளார்.அப்போது தும்பரிகூட மண்டல் என்ற இடத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சட்ட மன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ் உயிரிழந்தார்.அதேபோல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரி சோமா சுட்டுக்கொள்ள்ளப்படடார்.மேலும் உடன் சென்ற பாதுகாவலரும் சுட்டுக் கொல்லப்பட்டார் .இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் கிடாரி சர்வேஸ்வர ராவ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் தும்ரிகுடா காவல் நிலையத்திற்கு தீ வைத்துள்ளனர். மேலும் காவல்நிலையத்துக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ரெட் அலெர்ட் என்ற உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதனாலல் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.