கேரளா மாநிலம் திருச்சூரில் ஒரு பள்ளியில் முன்னாள் மாணவர் ஜெகன் என்பவர் திடீரென கைத்துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் திரிச்சூர் அருகே நிக்கனலில் இயங்கி வரும் விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர் ஒருவர் தனது பள்ளி வகுப்பறைக்கு சென்று திடீரென துப்பாக்கியை எடுத்து மேல் நோக்கி சுட்டுள்ளார்.
இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அங்கு உயிர்சேதம் ஏதும் நல்வாய்ப்பாக ஏற்படவில்லை. பின்னர் துப்பாக்கியால் சுட்ட முன்னாள் மாணவர் ஜெகனை பொதுமக்கள் பிடித்து திருச்சூர் கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தகவலறிந்து வந்த போலீசார் அந்த முன்னாள் மாணவரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். பள்ளியில் துப்பாக்கிசூடு நடத்திய முன்னாள் மாணவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
உத்தரவை கிடப்பில் போட்ட டெல்லி அரசு.? எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்.!
இதுதொடர்பாக பள்ளியில் இரண்டு ஆசிரியர்களை பற்றி விசாரித்தப்பின் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர், தான் படிக்கும்போது தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த தொப்பியை திருப்பி தருமாறு கோரியதாகவும், பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, முன்னாள் மாணவர் எதற்கு பள்ளிக்கு சென்று துப்பாக்கிசூடு நடத்தினார்?, அவர் மதுபோதையில் இருந்தாரா? அவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது?, எதாவது உள்நோக்கத்துடன் இந்த துப்பாக்கிசூடு நடத்தினரா? என பல்வேறு கோணங்களில் அப்பகுதி காவல் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…