மத்திய அரசின் கொரோனா தடுப்பு ஆய்வு குழுவின் தலைவர் திடீர் விலகல்…!

Default Image

மத்திய அரசின் கொரோனா தடுப்பு ஆய்வு குழுவின் தலைவர் ஷாகித் ஜமால் திடீர் விலகல். 

கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸின் மரபணு கூட்டமைப்பின் ஆய்வு மற்றும் ஆலோசனை குழு, நாட்டில் உள்ள 10 முக்கியமான அரசின் ஆய்வகங்களை ஒன்றிணைத்து, கொரோனா தடுப்பு ஆய்வகத்தை உருவாக்கி உள்ளனர். இதற்கு தலைவராக மூத்தவராக ஷாகித் ஜமால் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் அசோகா பல்கலை கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் துறையில் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இந்த குழுவில் பொறுப்பில் இருந்து திடீரென விலகியுள்ளார். ஆனால் இவர் எதற்காக விலகினார் என்பது குறித்த காரணங்களை அவர் தெரிவிக்கவில்லை. இவர் இந்தியாவில் தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறை குறித்து இவர் மத்திய அரசை  விமர்சித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு நடத்த போதுமான ஒத்துழைப்பு மத்திய அரசு தராத காரணத்தாலும், மத்திய அரசிடம் இருந்து எதிர்ப்புகள் வருவதாலும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், அவர் உருமாறிய வைரஸின் தொற்று  குறித்தும், இரண்டாவது அலையின் தாக்குதலையும் குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.  ஆனால், அதனை அலட்சியப்படுத்திய மத்திய அரசு, கும்பமேளா, தேர்தல் பிரச்சாரங்கள் கூட்டங்கள்தான் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்க  காரணம் என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளே இவர் பதவி விலக காரணம் எனக் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்