மின் கசிவு காரணமாக இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள ஆஸ்தான மண்டபத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயர் சுவாமி கோயிலுக்கு அருகில் கிட்டத்தட்ட 150 கடைகள் வரை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே இருக்கக்கூடிய ஆஸ்தான மண்டபத்தில் கடைகளுக்கு அருகே செல்லக் கூடிய மின் வயரில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. எனவே, திடீரென எதிர்பாராத விதமாக மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ அருகில் இருந்த ஏழு கடைகளுக்கு மளமளவென பரவி கடைகள் எரிந்து நாசமாகியுள்ளது.
இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு துறையினரின் முயற்சியால் தீ கட்டுக்குள் வந்துள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் அந்நேரத்தில் யாரும் கடைகளில் இல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…