பெங்களூரு உத்யான் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து!
பெங்களூரு கெம்பே கவுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், B1, B2 பெட்டிகளில் ஏற்பட்ட புகையால் ரயில் நிலையம் முழுவதும் புகை மண்டலமாக மாறியதால் சிறிய பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உடேன, அங்கிருந்து பயணிகள் விரைந்து வெளியேற்றப்பட்டதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.