விசாகப்பட்டினம் HPCL ஆலையில் திடீர் தீ விபத்து!
விசாகப்பட்டினத்தில் உள்ள HPCL எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் அருகே மல்கா புரத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆலையில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் வண்டிகளில் வந்து தீயை அணைத்துள்ளாரம் மேலும், இந்த இடத்திற்கு இந்திய கடற்படையை சேர்ந்த வல்லுநர் குழுவும் விரைந்து வந்து தீயை அணைத்து உள்ளது. இதனையடுத்து தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த இடத்திலிருந்து 6 HPCL தொழிலாளர்கள் காணவில்லை என கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை எந்தவிதமான உயிரிழப்புக்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. மற்ற தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட ஆலையிலிருந்து பெரும் தீப்பிழம்புகள் மற்றும் புகை வரும் வீடியோக்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. மேலும் HPCL ஆலையில் கச்சா எண்ணெய் வடிகட்டும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.