ராஜஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம்…!

ராஜஸ்தானில் இன்று அதிகாலை 5.24 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் இன்று அதிகாலை 5:24 மணிக்கு ரிக்டர் அளவில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் எந்தவிதமான சேதமும் ஏற்பட்டதாக எந்த தகவல் வெளியாகவில்லை என்றாலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025