தங்கக் கடத்தல் வழக்கில் சிறையில் இருந்த ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கேரளாவில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரகம் முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தபுரத்திலுள்ள அட்டகுளங்கரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்த அவருக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்வப்னாவின் உடல்நிலை சீராக இருப்பதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.