திடீர் மாற்றம்.! காலை 11 மணிக்கு 5-ஆம் கட்ட முக்கிய அறிவிப்புகள் .!
நாளை காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதனை சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் பலன் பெறும் வகையில் பொருளாதார மீட்பு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.
இன்றைய அறிவிப்பில் கனிமங்கள், தடவாள உற்பத்தி, விமானம், விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட 8 துறைகளுக்கு முக்கிய திட்டங்களை அறிவித்தார். இதனையடுத்து நாளை 5-வது நாளாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
வழக்கமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாலை 4 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்புகளை அறிவித்து வந்தார். இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக நாளை காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.