சோலோகேமி திருமணங்களை அங்கு நான் நடத்த விடமாட்டேன் என பாஜக முன்னாள் துணை மேயர் சுனிதா சுக்லா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள பரோடா பகுதியை சேர்ந்த பெண் சாமா பிந்து. இவருக்கு வயது 24. இவர் எம்எஸ் பல்கலைக்கழகத்தில் சோசியாலஜி பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் ஜூன் 11ஆம் தேதி நடைபெற உள்ள தன்னுடைய திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.
இதற்கான ஆயத்த வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில், இவரது திருமணத்தில் பங்கேற்க சில உறவினர்களையும் அழைத்துள்ளார். ஆனால் இந்த திருமணம் வித்தியாசமான முறையில் நடைபெற உள்ளது. ஏனென்றால் இந்த திருமணத்தில் மணமகன் இல்லை. அதற்கு காரணம் என்னவென்றால் அப்பெண் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் சிறுவயதில் இருந்தே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் நான் மணமகளாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் என்னை நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.
இதுகுறித்து பாஜக முன்னாள் துணை மேயர் சுனிதா சுக்லா கூறுகையில், இத்தகைய திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது.இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும்.கோயில் புனிதமான இடம்,இது போன்ற திருமணங்களை அங்கு நான் நடத்த விடமாட்டேன் .
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…