பேடிஎம் பயனாளர்களுக்கு இப்படி ஒரு சலுகையா! வெறும் 9 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்!
பேடிஎம் பயன்படுத்துபவர்கள் முதன்முறையாக பேடிஎம் செயலி மூலமாக எல்பிஜி சிலிண்டர் பதிவு செய்தால் பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்கு பம்பர் பரிசாக 800 ரூபாய் வரையிலும் சலுகை வழங்குகிறது.
பேடிஎம் செயலியை பயன்படுத்துவார்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு சிறந்த சலுகையை பேடிஎம் நிறுவனம் வழங்குகிறது. அதாவது தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிக அளவில் உயர்ந்து வரும் நிலையில், எல்பிஜி சிலிண்டர்களின் விலையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. 809 ரூபாய் விலையில் விற்க கூடிய இந்த கேஸ் சிலிண்டரை வெறும் ஒன்பது ரூபாய்க்கு வாங்க முடியும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம். அதாவது, வெறும் ஒன்பது ரூபாய் கொடுத்து நீங்கள் வேறு எங்கும் இந்த சிலிண்டரை வாங்க முடியாது. பேடி எம் உபயோகிப்பவராக இருந்தால் உங்களுக்கு கொடுக்கக்கூடிய பம்பர் தொகையிலிருந்து நீங்கள் இந்த கேஸ் சிலிண்டரை குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ள முடியும்.
அதாவது நீங்கள் பேடி எம் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும். பேடிஎம் மூலமாக முதல்முறை கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு பேடிஎம் இந்த சலுகையை வழங்கியுள்ளது. கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்துவிட்டு நீங்கள் அனுப்ப வேண்டிய பணத்தையும் பேடிஎம் மூலமாகவே அனுப்பிவிட வேண்டும். அதன் பின்பதாக உங்களுக்கு பேடிஎம் மூலம் ஒரு ஸ்கிராட்ச் கார்டு கிடைக்கும். இந்த கார்டில் பத்து ரூபாய் முதல் 800 ரூபாய் வரையிலும் உங்களுக்கு பம்பர் பரிசு காத்திருக்கும். அனைவருக்கும் 800 ருபாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும், பலருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் நீங்கள் இந்த சலுகையை பயன்படுத்த விரும்பினால், இந்த மே மாதம் 31-ஆம் தேதி வரை மட்டுமே உங்களுக்கு வாய்ப்பு.
முதலில் பேடிஎம் செயலியில் உள்ள showmore பட்டனை கிளிக் செய்து, reacharge and bills பட்டனை கிளிக் செய்யவும். அதன் பின்புbook cylinder என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கான எரிவாயு திட்டத்தை தேர்ந்தெடுக்கவும். அதன்பின் உங்களுக்கான otp எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்பாக நீங்கள் சிலிண்டருக்கு பணம் கட்டி, 24 மணி நேரத்தில் உங்களுக்குப் பேடிஎம் மூலமாக கேஷ்பேக் கொண்ட ஸ்கிராட்ச் கர்டு கிடைக்கும். இந்த கார்டில் பத்து ரூபாய் முதல் 800 ரூபாய் வரை இருக்கும். இதை அடுத்த 7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு நீங்கள் பேடிஎம் மூலம் குறைந்த விலையில் சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம்.