இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்.!
வெடிகுண்டு மிரட்டல்களுக்கு மத்தியில் ஆகாச ஏர் மற்றும் இண்டிகோ விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 2 நாட்களில் 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
சென்னை : கடந்த 48 மணி நேரத்தில் இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஆகாச ஏர் நிறுவனங்களின் 10-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட்டில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பயணித்த ஹெலிகாப்டரும், பித்தோராகர் மாவட்டத்தில் அவசரமாக தற்போது தரையிறக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் பாதுகாப்பு அச்சுறுத்தலால், அகமதாபாத்தில் தரையிறங்கியது.
அந்த வகையில், டெலியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்தம் ஆகாச ஏர் விமானம் மீண்டும் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனிடையே, நெற்றிவு (செவ்வாய்க்கிழமை) 10:04 மணியளவில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இது தொடர்பாக, விசாரணைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய சைபர்-செக்யூரிட்டி ஏஜென்சிகள் மற்றும் சட்ட அமலாக்கத்துடன் இணைந்து சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பணியகம் (BCAS) இந்த அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் உள்ளவர்களைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.