அணுசக்தி திறன் கொண்ட “ஷவுர்யா” ஏவுகணை சோதனை வெற்றி.!
அணுசக்தி திறன் கொண்ட “ஷவுர்யா” ஏவுகணையின் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இந்தியா.
இந்திய பாதுகாப்புத் துறையில் அதிகமான ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் என்ற ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது.
அந்த வகையில், இன்று மற்றொரு சோதனை வெற்றிகரமாக முடிந்தது. ஒடிசாவின் பாலசூரிலிருந்து அணுசக்தி திறன் கொண்ட “ஷவுர்யா” என்ற ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது இந்தியா. ஷவுர்யா ஏவுகணை கடந்த காலத்தில் வடிவமைக்கப்பட்டு சமீபத்தில் நவீனமயமாக்கப்பட்டது. இது 800 கி.மீ வேகத்தில் இலக்குகளை தாக்க கூடியது. தற்போதுள்ள ஏவுகணையுடன் ஒப்பிடுகையில் இது லேசான ஏவுகணை மற்றும் ஏவவும் எளிதானது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.