கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி! குகேஷிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

குகேஷின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

gukesh dommaraju pm modi

சிங்கப்பூர் :  நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில்  சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயது குகேஷ்,  உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.

இதனையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.  அவரை தொடர்ந்து பிரதமர் மோடியும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” குகேஷின் வெற்றி வரலாற்றுக்கு ஒரு முன்மாதிரியான வெற்றி. அவரது குறிப்பிடத்தக்க சாதனைக்கு நான் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இது அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் சோர்வடையாத சக்திக்கு கிடைத்த வெற்றி.

அவரது வெற்றி, செஸ் வரலாற்றில் அவருடைய பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியது. குகேஷின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்