மோடியை சீனாவுக்கு தூதரக நியமிக்க வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி

Subramanian Swamy: பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்.
கடந்த ஆண்டுகளாவே இந்திய எல்லை பகுதிகளை சீனா சொந்த கொண்டாடி வரும் சூழல் நிலவி வருகிறது. அதில் குறிப்பாக அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் மீது உரிமை கொள்ளும் வகையில் சீனா தனது செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட அருணாச்சல் பிரதேசத்தின் பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியுள்ள சம்பவம் நடந்தது.
அதன்படி, கிழக்கு அருணாச்சப் பிரதேசத்தில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட “ஸங்னங்” பகுதி என பெயரிட்டுள்ளது. மொத்தம் 30 இடங்களுக்கு மேல் சீனா பெயரை மாற்றி உள்ளது. இதில், 11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ளது.
இந்த பெயர் சூட்டும் சம்பவம் நான்காவது முறையாக சீனா கையாண்டுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது, அருணாச்சல பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒரு அங்கம்தான். பெயரை மாற்றி சீனா உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கதல்ல. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு ராணுவம் கண்காணிப்பில் உள்ளது என கூறியிருந்தார்.
இந்த நிலையில், மோடியை சீனாவுக்கு தூதரக நியமிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், அருணாச்சல பிரதேசத்தில் இருந்து லடாக் வரை இந்திய பகுதிகளை சீனா தட்டி பறிக்கிறது. சீனா ஆக்கிரமித்ததாக கூறப்படும் இடத்திற்கு யாரும் வரவில்லை, நாங்களும் போகமாட்டோம் என பிரதமர் மோடி கூறி வருகிறார். இதனால் பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!
February 23, 2025
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025